Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தருணம் இதுவே கிருபை கூரும்

பல்லவி

தருணம் இதுவே, கிருபை கூரும்,
வழிபாரும், பதம் தாரும், தாரும்.

சரணங்கள்

1. கருணை தெய்வ குமாரா, கன மனுடவதாரா;
அருமை ரட்சக யேசு நாதா,-உல
கனைத்தும் வணங்கும் சத்ய வேதா,-உன்றன்
அடியர்க் கருளும் திருப் பாதா,-சத்ப்ர
சாதா, நீதா!- தருணம்

2. வானத்திலிருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
மகிமைப் பிரதாவின் திருப் பாலா,-ஆதி
மைந்தர்க் கிரங்கும் அனுகூலா,-கன
விந்தைக் கருணை மனுவேலா,-மெய்ந்
நூலா, சீலா! – தருணம்

3. அற்ப உலக வாழ்வில் அலைந்து, நிலை குலைந்து,
அலகைப்படு குழியில் வீழ்ந்து,-தாழ்ந்து,
அஞ்சி அஞ்சி நலிந் தேனே;-அடிமைக்
கஞ்சல் என்றுசொல்லும் கோனே,-சீ
மானே, தானே! – தருணம்

4. இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
சொந்தக் கிருபைகள் மா காத்ரம்,-அவை
சிந்தித்து மடியாவிச் சேத்ரம்,-நிர்ப்
பந்த அடியர்கள் எம் மாத்ரம்!-பத
தோத்ரம்! தோத்ரம்! – தருணம்

Tharunam Ithuvae Kirubai Koorum – தருணம் இதுவே கிருபை கூரும் Lyrics in English

Pallavi tharunam ithuvae, kirupai koorum, valipaarum, patham thaarum, thaarum. Saranangal 1. Karunnai theyva kumaaraa, kana manudavathaaraa; arumai ratchaka yaesu naathaa,-ula kanaiththum vanangum sathya vaethaa,-untan atiyark karulum thirup paathaa,-sathpra saathaa, neethaa!- tharunam 2. Vaanaththilirunthu vantha njaanaththoli sirantha makimaip pirathaavin thirup paalaa,-aathi mainthark kirangum anukoolaa,-kana vinthaik karunnai manuvaelaa,-meyn noolaa, seelaa! – tharunam 3. Arpa ulaka vaalvil alainthu, nilai kulainthu, alakaippadu kuliyil veelnthu,-thaalnthu, anji anji nalin thaenae;-atimaik kanjal entusollum konae,-see maanae, thaanae! – tharunam 4. Intha ulakath themaich santhith thanukkirakiththa sonthak kirupaikal maa kaathram,-avai sinthiththu matiyaavich sethram,-nirp pantha atiyarkal em maathram!-patha thothram! Thothram! – tharunam

PowerPoint Presentation Slides for the song Tharunam Ithuvae Kirubai Koorum – தருணம் இதுவே கிருபை கூரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தருணம் இதுவே கிருபை கூரும் PPT
Tharunam Ithuvae Kirubai Koorum PPT

தருணம் தாரும் கருணை திருப் அஞ்சி தோத்ரம் பல்லவி இதுவே கிருபை கூரும் வழிபாரும் பதம் சரணங்கள் தெய்வ குமாரா கன மனுடவதாரா அருமை ரட்சக English