ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழுநாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29:13நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்க தகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29:14அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும்,
எண்ணாகமம் 29:15பதினான்கு ஆட்டுக்குட்டிகளின் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்.
எண்ணாகமம் 29:16நித்திய தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29:17இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29:18காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29:19நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29:20மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29:21காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29:22நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29:23நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29:24காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29:25நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29:26ஐந்தாம் நாளிலே ஒன்பது காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29:27காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29:28நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29:29ஆறாம் நாளிலே எட்டுக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29:30காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29:31நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29:32ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29:33காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29:34நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29:35எட்டாம் நாள் உங்களுக்கு விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
எண்ணாகமம் 29:36அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள தகனமான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29:37காளையும் ஆட்டுக்கடாவும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29:38நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29:39உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் சர்வாங்க தகனபலிகளையும், உங்கள் போஜனபலிகளையும், உங்கள் பானபலிகளையும், உங்கள் சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.
எண்ணாகமம் 29:40கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்.