2 இராஜாக்கள் 15

fullscreen1 இஸ்ரவேலின் ராஜாவாகߠί யெரொபெயாமின் இருபத்தேழாம் வரρஷத்தில், ய ΤாவߠΩ் ராஜாவாகிய அமத்சߠίாவின் குமாரன் அசரியா ராஜாவானான்.

fullscreen2 அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.

fullscreen3 அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

fullscreen4 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள் மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.

fullscreen5 கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.

fullscreen6 அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

fullscreen7 அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 In the twenty and seventh year of Jeroboam king of Israel began Azariah son of Amaziah king of Judah to reign.

2 Sixteen years old was he when he began to reign, and he reigned two and fifty years in Jerusalem. And his mother’s name was Jecholiah of Jerusalem.

3 And he did that which was right in the sight of the Lord, according to all that his father Amaziah had done;

4 Save that the high places were not removed: the people sacrificed and burnt incense still on the high places.

5 And the Lord smote the king, so that he was a leper unto the day of his death, and dwelt in a several house. And Jotham the king’s son was over the house, judging the people of the land.

6 And the rest of the acts of Azariah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?

7 So Azariah slept with his fathers; and they buried him with his fathers in the city of David: and Jotham his son reigned in his stead.