இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான் என்றார்.
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே கர்த்தருடைய ஆலயத்தின் சகல நியமங்களையும் அதின் சகல சட்டங்களையுங்குறித்து நான் உன்னோடே சொல்வதையெல்லாம் நீ உன் மனதிலே கவனித்து, உன் கண்களினாலே பார்த்து உன் காதுகளினாலே கேட்டு, பரிசுத்த ஸ்தலத்தினுடைய எல்லா வாசற்படிகளின் வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசிப்பதும் அதிலிருந்து புறப்படுவதும் இன்னவிதமென்று நீ ஆலோசித்துப் பார்த்து,
இஸ்ரவேல் வம்சத்தாராகிய கலகக்காரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும்.
நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும், விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை.
ஆகிலும் அவர்கள் என் ஆலயத்தின் வாசல்களைக் காத்து, என் ஆலயத்தில் ஊழியஞ்செய்து, என் பரிசுத்தஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்; அவர்கள் ஜனங்களுக்காக தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தி, இவர்களுக்கு ஊழியஞ்செய்கிறதற்கு இவர்கள் முன்பாக என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்.
இவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும், மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள்.
இஸ்ரவேல் புத்திரரே, என்னைவிட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியர் என்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்.
அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது.
அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.
ஆசாரியர்களில் ஒருவனும் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.
விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் அவர்கள் விவாகம்பண்ணாமல், இஸ்ரவேல் வம்சத்தாளாகிய கன்னிகையையாகிலும் ஒரு ஆசாரியனின் மனைவியாயிருந்த விதவையையாகிலும் விவாகம்பண்ணலாம்.
அவன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்யும்படி பரிசுத்த ஸ்தலமிருக்கிற உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கிறநாளிலே, அவன் தனக்காகப் பாவநிவாரண பலியைச் செலுத்தக்கடவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமானபொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.
Then brought | וַיְבִיאֵ֜נִי | waybîʾēnî | vai-vee-A-nee |
he me the way | דֶּֽרֶךְ | derek | DEH-rek |
gate the north | שַׁ֣עַר | šaʿar | SHA-ar |
of | הַצָּפוֹן֮ | haṣṣāpôn | ha-tsa-FONE |
אֶל | ʾel | el | |
before | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
house: the | הַבַּיִת֒ | habbayit | ha-ba-YEET |
and I looked, | וָאֵ֕רֶא | wāʾēreʾ | va-A-reh |
behold, and, | וְהִנֵּ֛ה | wĕhinnē | veh-hee-NAY |
filled the | מָלֵ֥א | mālēʾ | ma-LAY |
glory of the | כְבוֹד | kĕbôd | heh-VODE |
Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
אֶת | ʾet | et | |
house the | בֵּ֣ית | bêt | bate |
of the Lord: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
fell I and | וָאֶפֹּ֖ל | wāʾeppōl | va-eh-POLE |
upon | אֶל | ʾel | el |
my face. | פָּנָֽי׃ | pānāy | pa-NAI |