Total verses with the word வேளையாயிருந்தது : 7

1 Kings 10:19

அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச்சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச் சாய்மானங்கள் அருகே நின்றது.

Exodus 38:18

பிராகார வாசலின் தொங்குதிரை இளநீல நூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட விசித்திரத்தையல் வேலையாயிருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்குதிரைகளுக்குச் சரியாய் ஐந்து முழம்.

1 Kings 3:4

அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்தினான்.

1 Chronicles 23:32

ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் தங்கள் சகோதரராகிய ஆரோனுடைய குமாரரின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும் அவர்கள் வேலையாயிருந்தது.

Numbers 7:9

கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.

John 1:39

அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.

John 4:6

அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.