Numbers 24:6
அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப் போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.
Psalm 144:12அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சங்களைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனைக் கற்களைப்போலவும் இருப்பார்கள்.