Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆத்மமே, உன் ஆண்டவரின்

ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா, என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று.

நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய் துதி;
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி;
அல்லேலுயா, அவர் உண்மை
மா மகிமையாம் துதி.

தந்தை போல் மா தயை உள்ளோர்;
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே!
அல்லேலுயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.

என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே,
நாற்றிசையும் நின்றெழுத்து
பணிவர் நீர் பக்தரே;
அல்லேலுயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.

Aathmamae Un – Aathmamae, Un Aanndavarin Lyrics in English

Aathmamae, un aanndavarin thiruppaatham panninthu, meetpu, sukam, jeevan, arul pettathaalae thuthiththu, allaeluyaa, ententaikkum niththiya naatharaippottaு. Nam pithaakkal thaalvil petta thayai nanmaikkaay thuthi; kopangaொnndum arul eeyum entum maaraathor thuthi; allaeluyaa, avar unnmai maa makimaiyaam thuthi. Thanthai pol maa thayai ullor; neesa mannnnor nammaiyae anpin karam konndu thaangi maattaாr veelththik kaappaarae! Allaeluyaa, innum avar arul virivaanathae. Entum nintavar samukam pottaுm thoothar koottamae, naattisaiyum ninteluththu pannivar neer paktharae; allaeluyaa, anaivorum anpin theyvam pottaுmae.

PowerPoint Presentation Slides for the song Aathmamae Un – Aathmamae, Un Aanndavarin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆத்மமே, உன் ஆண்டவரின் PPT
Aathmamae, Un Aanndavarin PPT

அல்லேலுயா அருள் துதி தயை மா அன்பின் ஆத்மமே ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து மீட்பு சுகம் ஜீவன் பெற்றதாலே துதித்து என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று நம் English