Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாக்கியர் இன்னார்

பாக்கியர் இன்னார்

பல்லவி

பாக்கியர் இன்னார்-என்றிறைவன்
பண்புடன் சொன்னார்.

அனுபல்லவி

ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே
அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில், – பாக்

சரணங்கள்

1. ஆவி பணிந்தோர்,-மனத்தாழ்மை-யான தணிந்தோர்,
பாவிகள் தாமென்று பயந்து நடப்போர்
தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர். – பாக்

2. துக்கப்படுவோர்,-பவத்துக்காய்த்-துயரப்படுவோர்
விக்கினமின்றி எந் தேவன் அருளினால்
மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர். – பாக்

3. சாந்த குணத்தோர்,-சண்டைகோப-தாபம் வெறுத்தோர்,
வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர்
மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்கியர். – பாக்

4. நீதியின் பேரில்-பசி தாகம்-நித்தம் கொள்வோரில்
போத மெய்ப் புத்தியும் பூரண பத்தியும்,
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர். – பாக்

5. இரக்க முடையோர்,-பிறர்மீது-உருக்கமுடையோர்,
நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர்
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர். – பாக்

6. சுத்தநெஞ்சத்தார்,-தேவனருன்-சுகிர்த ஜென்மத்தார்
பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின்
பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்கியர். – பாக்

7. சமாதானத்தை-நடப்பித்துச்-சல்யம் வாதத்தைத்
தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர்
நமதேகன் சேயர்கள் என்னும் மெய்ப்பாக்கியர். – பாக்

8. நற்செய்கை யிட்டுப்-பகைஞரால்-நஷ்டங்கள் பட்டுத்
துர்செய்கை நீங்கியே துன்பப் படுவோர்
சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்கியர். – பாக்

Bakkiyar Innar – பாக்கியர் இன்னார் Lyrics in English

paakkiyar innaar

pallavi

paakkiyar innaar-entiraivan
pannpudan sonnaar.

anupallavi

aakkiyon yaesuvin vaakkiyam kaetkavae
ananthamaana janam vananthanil nirkaiyil, – paak

saranangal

1. aavi panninthor,-manaththaalmai-yaana thanninthor,
paavikal thaamentu payanthu nadappor
thaevanin raajyam servathaal paakkiyar. – paak

2. thukkappaduvor,-pavaththukkaayth-thuyarappaduvor
vikkinaminti en thaevan arulinaal
mikka meyyaaruthal meetpurum paakkiyar. – paak

3. saantha kunaththor,-sanntaikopa-thaapam veruththor,
vanthanaar seykaiyul saanthanaiyum kolvor
maethini vaalvilum vinnnnilum paakkiyar. – paak

4. neethiyin paeril-pasi thaakam-niththam kolvoril
potha meyp puththiyum poorana paththiyum,
kaathalan aavi kadaatchippar paakkiyar. – paak

5. irakka mutaiyor,-pirarmeethu-urukkamutaiyor,
nerukkappaduvorkku naeyamuttuthavuvor
kaathalan aavi kadaatchippar paakkiyar. – paak

6. suththanenjaththaar,-thaevanarun-sukirtha jenmaththaar
paththiyil varththiththu niththamum thaevanin
parisuththa samukaththaith tharisikkum paakkiyar. – paak

7. samaathaanaththai-nadappiththuch-salyam vaathaththaith
thamathurai nadakkaiyaal thalli olukuvor
namathaekan seyarkal ennum meyppaakkiyar. – paak

8. narseykai yittup-pakainjaraal-nashdangal pattuth
thurseykai neengiyae thunpap paduvor
sukalokam sernthentum mukiyaatha paakkiyar. – paak

PowerPoint Presentation Slides for the song Bakkiyar Innar – பாக்கியர் இன்னார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாக்கியர் இன்னார் PPT
Bakkiyar Innar PPT

பாக்கியர் பாக் ஆவி தேவனின் காதலன் கடாட்சிப்பர் இன்னார் பல்லவி இன்னார்என்றிறைவன் பண்புடன் சொன்னார் அனுபல்லவி ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே அனந்தமான ஜனம் வனந்தனில் English