Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை அழைத்தவர் என்னை அறிந்தவர்

என்னை அழைத்தவர் என்னை அறிந்தவர்
என்னை அணைத்தவர் நீரல்லவா
அள்ளியெடுத்தவர் சொல்லிக் கொடுத்தவர்
அன்பைப் பொழிந்தவர் நீரல்லவா -2

எல்லாமே எல்லாமே நீரல்லவா
எனைத் தூக்கிச் சுமந்தீரே என் மன்னவா -2

பனிக்கூட்டில் கதகதப்பு நீரல்லவா
பனைக் காட்டில் குளிர்தென்றல் நீரல்லவா
செவி கேட்கும் நற்செய்தி நீரல்லவா
செந்தமிழின் பைங்கவிதை நீரல்லவா -2
சுகமான நடைப்பயிற்சி நீரல்லவா
சூடான சுவைத் தேநீர் நீரல்லவா -2

புதிர்வாழ்வில் விடைத்தாளும் நீரல்லவா
கதியற்ற எனை வளர்க்கும் தாதி அல்லவா
உயிர்க்கணினி மென்பொருளும் நீரல்லவா
உருண்டோடும் மலர்ப்பாதை நீரல்லவா -2
இரவு நேர ரயில் பயணம் நீரல்லவா
இசையோடு வரும் பாடல் நீரல்லவா -2

Ellame Neer Allava Lyrics in English

ennai alaiththavar ennai arinthavar
ennai annaiththavar neerallavaa
alliyeduththavar sollik koduththavar
anpaip polinthavar neerallavaa -2

ellaamae ellaamae neerallavaa
enaith thookkich sumantheerae en mannavaa -2

panikkoottil kathakathappu neerallavaa
panaik kaattil kulirthental neerallavaa
sevi kaetkum narseythi neerallavaa
senthamilin paingavithai neerallavaa -2
sukamaana nataippayirsi neerallavaa
soodaana suvaith thaeneer neerallavaa -2

puthirvaalvil vitaiththaalum neerallavaa
kathiyatta enai valarkkum thaathi allavaa
uyirkkannini menporulum neerallavaa
urunntoodum malarppaathai neerallavaa -2
iravu naera rayil payanam neerallavaa
isaiyodu varum paadal neerallavaa -2

PowerPoint Presentation Slides for the song Ellame Neer Allava

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை அழைத்தவர் என்னை அறிந்தவர் PPT
Ennai azhaiththavar ennai arinthavar PPT

நீரல்லவா என்னை எல்லாமே அழைத்தவர் அறிந்தவர் அணைத்தவர் அள்ளியெடுத்தவர் சொல்லிக் கொடுத்தவர் அன்பைப் பொழிந்தவர் எனைத் தூக்கிச் சுமந்தீரே மன்னவா பனிக்கூட்டில் கதகதப்பு பனைக் காட்டில் English