Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்ன பாக்கியம் எவர்க்குண்டு

என்ன பாக்கியம், எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?

விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன

1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன

2. சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் — என்ன

3. அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? — என்ன

4. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது;
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது — என்ன

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு Lyrics in English

enna paakkiyam, evarkkunndu
inthach silaakkiyam?

vinnnavarum, puvimaevum munivarkalum,
mannavarung kaannaa makipanai yaan kanntaen — enna

1. vaanakan thaano – allathithu – vaiyakan thaano?
aanakam sentu eluntha arumporul
kaanakan thannil en kaiyil amarnthathu — enna

2. saamiyaik kanntaen – makaanantham – saalavungaொnntaen,
kaamaru thaengani vaaykal thutippathum,
kannnum manamum kalikka vilippathum — enna

3. annamum neeyae – kitaiththarkarunj sonnamum neeyae;
minnatru maekath thirukkai thuranthaiyo?
maethini thannai ratchikkap piranthaiyo? — enna

4. pothum ivvaalvu – parakathi – povaen ippothu;
aethaen enta paratheesum vanthittathu;
ennnnillaatha selvam en kaiyil kittuthu — enna

PowerPoint Presentation Slides for the song Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்ன பாக்கியம் எவர்க்குண்டு PPT
Enna Baakkiyam Evarkkundu PPT

கண்டேன் தானோ கையில் நீயே பாக்கியம் எவர்க்குண்டு இந்தச் சிலாக்கியம் விண்ணவரும் புவிமேவும் முனிவர்களும் மன்னவருங் காணா மகிபனை யான் வானகந் அல்லதிது வையகந் English