Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்

1. வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் நான் – என்
இரட்சகரை நன்றியோடே வாழ்த்திடுவேன் நான்

2. மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமை சுதனே!
ஈனவேஷம் எடுத்த உம்மை வாழ்த்திடுவேன் நான் – வா

3. பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தவரே!
பாரிலும்மை நினைத்து என்றும் வாழ்த்திடுவேன் நான் – வா

4. குருசெடுத்து கொல்கொதாவிலேறிச் சென்றவரே! திருப்
பாதம் ரெண்டும் முத்தஞ்செய்து வாழ்த்திடுவேன் நான் – வா

5. குருசிலேறி மரித்துயிர்த்து சொர்க்கம் போனவரே!
நித்தமும் நீர் ஜீவிப்பதால் வாழ்த்திடுவேன் நான் – வா

6. தூதரோடு மேகமீது வாறேனென்றாரே
நானும்மைக் காண்பதற்காய்க் காத்திருப்பேனே! – வா

7. உன் வரவில் முன்னணியில் நின்றிடவே நான்
என்னை ப்ராப்தியாக்கிடுமேன் உம் கிருபையால் – வா

Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் Lyrics in English

1. vaalththiduvaen vaalththiduvaen vaalththiduvaen naan – en
iratchakarai nantiyotae vaalththiduvaen naan

2. maattuththoluvil pirantha makimai suthanae!
eenavaesham eduththa ummai vaalththiduvaen naan – vaa

3. paathakarkkaay neethivali othith thanthavarae!
paarilummai ninaiththu entum vaalththiduvaen naan – vaa

4. kuruseduththu kolkothaavilaerich sentavarae! thirup
paatham renndum muththanjaெythu vaalththiduvaen naan – vaa

5. kurusilaeri mariththuyirththu sorkkam ponavarae!
niththamum neer jeevippathaal vaalththiduvaen naan – vaa

6. thootharodu maekameethu vaaraenentarae
naanummaik kaannpatharkaayk kaaththiruppaenae! – vaa

7. un varavil munnanniyil nintidavae naan
ennai praapthiyaakkidumaen um kirupaiyaal – vaa

PowerPoint Presentation Slides for the song Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் PPT
Vaazthiduven Vaazthiduven PPT

வாழ்த்திடுவேன் வா இரட்சகரை நன்றியோடே மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமை சுதனே ஈனவேஷம் எடுத்த உம்மை பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தவரே பாரிலும்மை நினைத்து குருசெடுத்து கொல்கொதாவிலேறிச் English