Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வருவார் விழித்திருங்கள்

பல்லவி

வருவார் விழித்திருங்கள் , இயேசுநாதர்
வருவார் விழித்திருங்கள்

அனுபல்லவி

பெரியவர் சிறியவர் பேதையர் மேதையர்
சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட – வரு

சரணங்கள்

1.பேரிகையால் அண்டபித்திகளும் குலுங்க
பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க
தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும்
சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திட – வரு

2.வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க
ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க
மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க
ஞான கானம் பாடநல்லோர் சபை தொடங்க – வரு

3.விசுவாசிகள் தமை மெச்சிப் புகழுதற்கும்
மேலா மோட்ச தலத்தோர் சால மகிழுதற்கும்
விசுவாச ஈனரை வியவா திகழுதற்கும்
விண்ணோர் குழாங்கள் சூழ, அண்ணல் கிறிஸ்தரசர் – வரு

Varuvaar Vilithirungal – வருவார் விழித்திருங்கள் Lyrics in English

pallavi

varuvaar viliththirungal , Yesunaathar
varuvaar viliththirungal

anupallavi

periyavar siriyavar paethaiyar maethaiyar
saruvarkkum naduththeerththuth thaku palan aliththida – varu

saranangal

1.paerikaiyaal anndapiththikalum kulunga
paer ekkaalath thoniyaal paeyk kanangal kalanga
thaaranniyor malanga, thamaip pattinorkalum
seernirai thootharum sernthu soolnthida – varu

2.vaanam madamadenka, vaiyam kidukidenka
eenap paeyaich serntha evarum nadunadunga
maanam inti vaalntha maa paathakar adanga
njaana kaanam paadanallor sapai thodanga – varu

3.visuvaasikal thamai mechchip pukalutharkum
maelaa motcha thalaththor saala makilutharkum
visuvaasa eenarai viyavaa thikalutharkum
vinnnnor kulaangal soola, annnal kiristharasar – varu

PowerPoint Presentation Slides for the song Varuvaar Vilithirungal – வருவார் விழித்திருங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வருவார் விழித்திருங்கள் PPT
Varuvaar Vilithirungal PPT

வரு வருவார் விழித்திருங்கள் பல்லவி இயேசுநாதர் அனுபல்லவி பெரியவர் சிறியவர் பேதையர் மேதையர் சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட சரணங்கள் பேரிகையால் அண்டபித்திகளும் குலுங்க English