Jeremiah 41:8
ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து; எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.
Revelation 6:5அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
Numbers 2:16எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.
1 Chronicles 7:3ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள்.
Revelation 6:7அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.
2 Kings 2:7தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.
Revelation 6:3அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.
Numbers 1:25காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
2 Chronicles 8:10ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் ஜனத்தை ஆண்டார்கள்.
Numbers 4:36அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுபேர்.
Numbers 2:15அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
Isaiah 30:17நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு காடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.
Revelation 17:10அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.
Leviticus 26:8உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத்துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
Luke 12:52எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
1 Chronicles 2:4அவன் மருமகளாகிய தாமார் அவனுக்கு பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்துபேர்.
1 Chronicles 2:6சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
Nehemiah 7:25கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர்.
Genesis 18:28ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர் நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
Matthew 25:2அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.